இது நெருங்கிய நட்பிடமிருந்து கிடைக்கப்பட்ட செய்தி.
சம்பவம் நடந்து கனகாலமல்ல.. இரண்டு மாதங்கள்தான் ஆகிறது.
ஊரில் இருக்கும் நட்பின் உறவுக்கார பெண் ... அவ்வளவு வசதியானவரல்ல .
நள்ளிரவில் தாயாருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட ,அயலில் உள்ள ஒரு ஆட்டோவை அழைத்து மருத்துவ மனைக்கு போய்க்கொண்டிருந்த போதில் இருட்டில் ஆட்டோ பள்ளத்தில் விழுந்த வேகத்திலேயே தாயார் பரலோகத்துக்கு ட்றவலாகிவிட்டார்.
தாயாரின் கடமைகளை முடித்து நிமிர்ந்த மகளுக்கு ஆட்டோக்காரனின கதை கேட்டு பேரதிர்ச்சி.
ஆட்டோவை திருத்த பெரும் தொகை கேட்டு விவாதிக்கிறான்.
ஆட்டோவை கொண்டு புரட்டி என்தாயாரை கொன்றவனே நீதான்.நீயே என்னிடம் பணம் கேட்பது என்ன நியாயமென அந்த அம்மையார் கேட்டதற்கு .
இல்லை உனது தாயாரை கூட்டி போகவந்த எமதர்மனால்தான் என்ஆட்டோ பாழாகிவிட்டது. நட்ட ஈடு தரவே வேண்டுமென அடம் பிடித்திருக்கிறான்.
அப்பாவி பெண்ணும் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தூரத்து உறவுகளிடமிருந்து உதவி பெற்று ஒரு தொகையை ஆட்டோக்காரனுக்கு கொடுத்தும் , ருசிகண்ட பூனைபோல அவன் இன்னும் வேண்டுமென்று அம்மையாரை நச்சரிக்க பலரின் ஆலோசனையின் பெயரில் அந்த பெண் நீதி மன்றத்தை நாடுவதென முடிவெடுத்திருக்கிறார்.
அனேகமாக இந்த கேஸ் நீதிமன்றத்துக்கு வரும்பட்சத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிபதியால் எமதர்மனுக்கும் ஆணைபிறப்பிக்கப்படக்கூடும்.
எமதர்மன் சமூகமளிக்காத பட்சத்தில் குறிப்பிட்ட திகதிக்குள் எமதர்மன் சரண்டராக வேண்டு மென்றும் சம்மன் அனுப்பக்கூடும். அதையும் எமதர்மன் இக்னோர் பண்ணுவாராக இருந்தால் கண்ட இடத்தில் கைது செய்யும்படி நீதிபதியால் பிடிவிராந்து அனுப்பப்படும் .
ஆக.. அதன்பின் ... காலம் பூராவும் கயறுவீசி திரிந்த எமதர்மன் பொலீஸ் வலை வீசி தேடப்படப் போகிறார்.
ஓடி களைக்கும் எமதர்மன் ஒரு வீட்டில் தண்ணீர் கேட்பான். அப்ப நாங்க சொல்லுவோம்.
#நாங்க எமனுக்கே தண்ணி காட்டுனாக்களெல#
#நடந்த சம்பவம் உண்மை#
பிப்21/2018

No comments:
Post a Comment