பார்ட்டிகளுக்கு போகும்போது மகனாருக்கு கார் கொண்டு போக அனுமதியில்லை. ஒரு கிளாஸ் பியர் குடித்து பிடிபட்டாலே லைசன்ஸ் பறி போய்விடும்.
நண்பனின் பிறந்த நாள் பார்ட்டிக்கு போயிருந்த மகனை கூட்டி வர போய் வெளியில் காத்திருந்த போது அந்த பிள்ளைதான் முதலில் வெளியே வந்தாள்.
மகனின் பள்ளி தோழி .
பாடசாலை , பல்கலைக்கழகம் வரை தொடர்ந்த நட்பு உத்தியோகஸ்தர் ஆன பின்பும் தொடர்கிறது.
காதலன் இருப்பதாகவும் கேள்வி . கடைசியாக கண்டது மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த மகனின் பிறந்த நாள் பார்ட்டியில்தான்.
கதவை திறந்து வந்தவள் என்னை கண்டதும் ஹாய் அங்கிள் என்றாள்.
பின்னால் மகனும் வந்து நிற்பதை அவள் அவதானிக்கவில்லை.
"எப்படி அங்கிள் இருக்கிறீங்க சுகமா?"
" இருக்கனம்மா நீங்க சுகமா"?
" ஓம் அங்கிள் நல்லம். உங்கள கண்டு கனநாளாயிற்று பார்க்க வித்தியாசமா இருக்கிறீங்க"
" இருக்கும்தானே வயது போனா"
" இல்லை அங்கிள் யு லுக் சோ ஜங் அங்கிள்"
இந்த நேரத்தில்தான் மகன் அந்த பிள்ளையின் முதுகை ஒற்றை விரலால் நோண்டி சொன்னான்.
"பத்து வருசமா நான் உன்னோட பழகுறன் , இதுவரைக்கும் உனக்கு என்னை பார்க்கவேணுமெண்டு நினைப்பே வரல இப்ப அப்பாவுக்கு லைனா? "
மகனை அடிக்க ஓடினாள்.. .மகன் பிடிபடாமல் ஓடினான் .....இந்த நேரத்தில் அவளின் காதலனும் வெளியில் வந்து what's going on ? what happened ?என்று கேட்க மகன் சொன்னான்.
"உன்ர ஆள் என்ரைஅப்பாவுக்கு லைன் போட்றாடா"
காதலன் சிரித்துக் கொண்டே சொன்னான்.
"அங்கிள் Please அங்கிள் என்னை தாடி வளர்க்க வைச்சிடாதீங்க அங்கிள்"
கொஞ்சநேர சிரிப்புக்கு பின் விடை பெற்று பிரிந்து விட்டார்கள்.
வரும் போது யோசித்தேன்.
இந்த கால தலைமுறை பிள்ளைகள் எவ்வளவு வெளிப்படையாக பேசி, பேசியதுகளை எவ்வளவு ஈஸியாகவும் கையாள்கிறார்கள்.
நடந்தது என்னமோ சிறு சம்பாசனைதான்.அதற்குள் அடங்கியவைகள்.....?????
வயது போனவனென்று ஒதுக்கி , விலத்தி நிற்கும் போலி புனிதத்தை கட்டுடைத்த விதம்.,
நட்புக்கும், காதலுக்கும் இடையிலான வெளிப்படை, புரிந்துணர்வு ....
எல்லாவற்றையும் ஒரு நூலிழையில் இவர்கள் எப்படி கடந்தார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகவே இருந்தது.
இந்த சம்பவம் மட்டும் நமது ஊர்களில் நடந்திருந்தால் இந்நேரம் எத்தனை தலைகள் உறுண்டிருக்கும் .
வீட்டுக்கு வந்ததும் நடந்த சம்பவத்தை மனைவியிடம் சொன்னேன்.
மனைவி கேட்குறா..
" இப்ப என்னப்பா இரவு சாப்பாடு ஏதும் வேணுமா இல்ல இதே சந்தோச மிதப்பில தூங்கப்போறியளோ"?
மீண்டும் ஐம்பத்தைந்து வயதானவனானான் விமலன்.
#நமக்கெண்டேவந்துவாய்ச்சிருக்கபா#
மார்ச்4/ 2018

No comments:
Post a Comment