தமிழ் கடைக்கு போயிருந்தன்.
பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த என்னை வாசலில் வழிமறித்தார்கள் இரண்டு தமிழ் இளைஞர்கள் .
" அண்ணா கொஞ்சம் கதைக்க வேணும் "
" சொல்லுங்க தம்பி என்ன?"
கையிலிருந்த நோட்டீஸ்களில் ஒன்றை கையில் திணித்தார்கள்.
" நாட்டுல நடக்கப்போகிற எலக்சனப்பற்றி கொஞ்சம் கதைக்க வேணும்.
" ம் "
" எங்கட தமிழினத்தின் உரிமைகளை மீட்பதற்கான முயற்சிகள தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு நாங்கள் இந்த தேர்தலில் இவையளுக்கு வாக்களிக்கவேணும்."
"ம் "
" உங்களுக்கு விளங்குதாண்ணா நாங்கள் என்னசொல்றமெண்டு?,
"ம்"
" அதாவதண்ணா நாங்கள் இந்த கருத்தை பரவலாக கொண்டு செல்ல வேண்டும் அண்ணா "
"ம் "
"ஊரிலுள்ள உறவுகளுக்கு எடுத்து சொல்லவேணுமண்ணா நீங்கள்"
"ம் "
" உங்களுக்கு முகநூல் இருக்காண்ணா?"
"ம் "
" நல்லதண்ணா முகநூலிலும் பகிருங்களண்ணா "
" ம்"
" அண்ணா நாங்கள் சொன்னது விளங்கிச்சோ?"
" ம் "
" அண்ணா மறக்க வேண்டாம் "
மீண்டும் ஷோபாசக்தியின் நாவல் தலைப்பையே பதிலாக்கி விட்டு நடந்தேன் .
எனது ஊரையோ எனதூரில் அவர்கள் சொன்னவர்கள் போட்டியிடுகிறார்களா என்பது பற்றியெல்லாம்அவர்கள் கேட்காத வரையில் போதுமென்ற நிம்மதி எனக்கு.
லண்டனில் 30 வருடமாக பல அன்னிய இடங்களுக்கு சகஜமாக போய்வந்தாலும் மட்டுமரியாதையாக , தயவு தாட்சண்ணியத்தோடு, அடக்கொடுக்கமாக அன்னிய உணர்வுடன் நான் போய்வரும் இடம் ஒன்றென்றால் அது நம்ம தமிழ் கடைகள்தான்.
பிப்3/2018

No comments:
Post a Comment